Sunday, June 19, 2011

புதுவலசை - MDPS மற்றும் EPMA இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா

நமதூரில் புதுவலசை முஸ்லிம் தர்ம பரிபாலன சபையும், அமீரக வாழ் நமதூர் முஸ்லிம்களின் கூட்டமைப்பான (EPMA-Emirates Puthuvalasai Muslim Association)-வும் இணைந்து அரபி ஒலியுல்லா உயர் நிலை பள்ளியில் 2010-2011-ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசளிப்பு விழா நடத்தபட்டது.

இஸ்லாமிய வழி முறைப்படி சகோதரர்.அகமது அமீன் ஆலிம் அவர்கள் திருமறை வசனங்களை ஓதி விழாவை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு புதுவலசை ஜமாத் தலைவர் ஜனாப்.அஹமது கபீர் அவர்கள் தலைமை வகித்தார்கள். பள்ளியின் தாளாளர் லியாக்கத் அலி, முன்னால் ஜமாஅத் தலைவர் முகம்மது மைதீன், முன்னால் தாளாளர் தௌஃபீஃக், பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் சீதக்காதி மரைகாயர் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியை சகோ.அக்பர் சுலைமான் அவர்கள் தொகுத்து வழங்கினார். EPMA சார்பாக சகோ.சாஹுல் ஹமீது, சகோ.அன்வர் ராஜா,ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். முதலாவதாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவியருக்குப் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது.


இதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டிலும், கடந்த கல்வி ஆண்டிலும் 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்று நமதூருக்கு பெருமை தேடி தந்த மாணவ,மாணவியருக்கு பதக்கங்கல் வழங்கப்பட்டன. நடப்பு கல்வி ஆண்டில் 20  மாணவ, மாணவிகள் 400-க்கும் மேல் மதிப்பெண் பெற்று பதக்கம்  பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் நமதூர் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு MDPS மற்றும் EPMA சார்பாக பரிசலித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள், ஜமாத்தார்கள், சங்கத்தார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சகோ.சாஹுல் ஹமீது அவர்கள் நன்றியுரையாற்ற விழா நிறைவுற்றது.

இது போன்ற மாணவ, மாணவிகளை ஊக்குவித்து பெருமைபடுத்தும் நிகழ்ச்சிகளை MDPS மற்றும் EPMA வருடம் தோறும் நடத்திவருவது மிகவும் பாரட்டுக்குறியது. இது கல்வியில் நமதூர்வாசிகளை சிறந்து விளங்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறவும், மென்மேலும் வளர்ச்சி அடையவும் puduvalasai.tk-வின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza