Monday, June 20, 2011

கழுதையா? குதிரையா?

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சிலமாந்தூர் போலீஸ் நிலைய சரகத்தில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, காரின் உள்ளே ஒரு பையில் ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சத்யசாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

கார் டிரைவர் ஹரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையில் பிடிபட்ட பணமானது, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாய்பாபாவின் தனிப்பட்ட அறையான யஜுர் மந்திரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிந்திக்கவும்: சாய்பாபா என்பவர் மேஜிக் வித்தைகளை காட்டி பொதுமக்களை ஏமாற்றி சம்பாதித்த பணமும், நகைகளும் அவர் மரணத்திற்கு பின்னால் அவர் தனி அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

கடவுளின் அவதாரமாக தன்னை பெருவாரி இந்து மக்களிடம் காட்டிக்கொண்டு படித்த இந்து பண்டிதர்களிடம், மேதாவிகளிடம் கூட இவரின் கோமாளித்தனம், தெய்வீகமாய் எடுபட்டது.

சிலநேரங்களில் மனிதன் இறந்தபின்னால்தான் அவன் செய்த செயல்கள் குறித்த உண்மைகள் வெளியே வரும். "புழுதி அடங்கிய பிறகுதான் தான் தெரியும் சவாரி செய்தது கழுதையா, குதிரையா என்று" என்ற பழமொழி போல்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza