குவைத் : வீட்டில் பணி புரியும் பெண் பணியாட்கள் மேல் ஆசைப்படும் ஆண்கள் அவர்களை சட்டபூர்வமாக விலைக்கு வாங்கி அடிமை மனைவிகளாய் வைத்துக் கொள்ள சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குவைத்தை சார்ந்த பெண் அரசியல்வாதியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சல்வா அல் முதைரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இணைய தளத்துக்கு அளித்த நேரலை பேட்டியின் போது சல்வா, குவைத் ஆண்களில் சிலர் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பணியாட்களளின் அழகில் மயங்கி, தவறாக நடந்து கொள்வதைத் தடுக்க அப்பெண்களை விலைக்கு வாங்கி இரண்டாம் தர அல்லது அடிமை மனைவிகளைப் போல் வைத்துக் கொள்ள சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறினார். மேலும், குவைத் ஆண்கள் விபசாரம் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்பதாலேயே இத்தகைய யோசனையைத் தான் கூறுவதாகத் தெரிவித்தார்.
தற்போது குவைத்தில் வீட்டு வேலைகளுக்கு பணிப்பெண்கள் வேண்டுவோர் அதற்கென உள்ள ஆட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்களை அணுகுவது போல், இதற்கும் தனி நிறுவனங்களை அமைக்கலாம் என்று கூறினார். செச்னியா போன்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பெண்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment