துபையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. 4.6.2011 துபையில் இருந்து வந்த ஒரு விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கஇலாகாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனால் சென்னைக்கு வந்த விமானங்களை அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் பரிசோதனை செய்தனர். இரவு 11.30 க்கு வந்த விமானத்தில் வித்தியாசமாக ஷூ அணிந்த மூன்று நபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்ததில் அவர்கள் காலுறையின் அடிப்பகுதியில் தங்கங்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 12 கிலோ தங்கம் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.இதைப்போல நேற்று (05.06.2011) காலையில் துபையிலிருந்து வந்த விமானத்தில் இவ்வாறே காலுறைக்குள் தங்கத்தை கடத்தி வந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனைவரும் கர்நாடகத்தைச் சார்ந்தவர்கள். காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment