சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க வலியுறுத்தி டெல்லியில் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய பாபா ராம்தேவ், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.
மத்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரண்டு மணி நேர இடைவெளியை விடுவதாக, டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார். சில பிரச்சனைகளில் 100% ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தம்மை சந்திக்க வந்த அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்னணியுடன் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்து பாபா ராம்தேவ் பாஜகவுக்கு மறைமுகமாக உதவி வருவதாக பாபா ராம்தேவுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவரின் உண்ணாவிரதப் போராட்டம் மேலும் சிலநாட்கள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment