Saturday, June 4, 2011

என்னை அச்சுறுத்த முயல்கின்றனர் : ராம்தேவ்!

 என்னை அச்சுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் இன்று உண்ணா விரதத்தைத் தொடங்கிய ராம்தேவ், அங்கு கூடியிருந்த தன்னுடைய ஆதரவாளர்களிடையே பேசும்போது, தன்னை அச்சுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக வெறுமனே குழுக்களை அமைத்துக் கொண்டிருக்காமல், உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்த நாட்டின் சொத்து என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நான் நிலைத் தன்மையை உருவாக்க முனைவதாகச் சிலர் மேம்போக்கான விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். நான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையேவோ அல்லது சாதிவாரியாகவோ அல்லது பகுதிவாரியாகவோ பிரிவினையை உருவாக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

உண்மைக்கான இந்தப் போராட்டத்தில், நானாக முதலில் யாரையும் தாக்க மாட்டேன். ஆனால் நான் தாக்கப்பட்டால், வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். திருப்பித் தாக்குவேன் என்றும் பாபா ராம்தேவ் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza