OurUmmah: யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலிஹ் கடந்த வெள்ளிகிழமை இடம்பெற்ற செல் தாக்குதல் ஒன்றில் காயம் அடைந்த நிலையில் தற்போது சவூதி அரேபியாவின் இராணுவ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் அவரின் மாளிகை மீதான தாக்குததில் அவரின் 11 மெய் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டதுடன். 5 அரசாங்க அதிகாரிகள் காயமடைந்தனர் என்று யெமன் தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது .
எதிர்க்கட்சியினரும், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் G. C. C. முன்வைத்த ஒப்பந்தத்திற்கு ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலிஹ் இணங்கியபோதும் தற்போது உள்ளநாட்டு யுத்தம் ஒன்றை நோக்கி நாடு நகர்வதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுகின்றது விரிவாக கடந்த நான்கு மாதங்களாக யெமனில் நடந்த போராட்டத்தில் 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது ஜனாதிபதி சிகிச்சை காரணமாக தனது பதவியை துணை ஜனாதிபதி அப்துல் ரவூப் மன்சூரிடம் ஒப்படைத்துள்ளார் தாக்குதலுக்கு யெமனின் பலம்குடியினர் மீது குற்றம் சாட்டபட்டபோதும் அதை அவர்கள் மறுத்துள்ளதுடன் இது ஜனாதிபதி அலி அப்துல்லா ஸாலிஹ் நாடகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment