Sunday, June 5, 2011

ஹிந்துத்துவா புழுதியில் உருவெடுத்த சாமியார் பாபா ராம்தேவ்!

யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது,  என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் திக்விஜய் சிங் கூறினார்.

ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்தியா முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் நடத்தினர்.

இதன் காரணமாக இந்திய மக்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை தீவிரவாத அமைப்பாக பார்க்கும்  இந்நிலையில், இவர் அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகளுக்கு யோகா சொல்லி கொடுக்கும் குருவாக பணியாற்றுகிறார்.

இவரை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா இயக்கங்கள் தங்கள் மீது படிந்துள்ள கறையை துடைக்க பார்கிறார்கள்.  காவி ஹிந்த்துதுவா தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பவே இந்த உண்ணாவிரத முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ், விஎச்பி அமைப்புகள்,  அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதுவும் செய்துவிட முடியாது.

இந்த ஹிந்துத்துவா அமைப்புகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் அதன் காரணமாகவே உள்நாட்டிலேயே தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி அதைவைத்து மத மாச்சாரியங்களை உண்டாக்க திட்டமிட்டனர்.

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் மத சண்டையை உண்டாக்கி, ஹிந்து பேரினவாதம் பேசி இந்தியாவை மீண்டும் ஒரு பிரிவினையை நோக்கி தள்ளும் ஒரு அபாயகரமான வேலையை செய்கிறார்கள்.

சிறிலங்காவில் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டதன் விளைவே தலைவர் பிராபாகரன் தலைமையில் 35 வருட கால ஆயுத போராட்டம், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு ஆயுத போராட்டத்தை தொடங்கினால் இந்தியா தாங்காது.

அதுபோல், இந்தியா என்பது பல மதம், இன, மொழி, மக்கள் வாழும் ஒரு மதசார்பற்ற நாடு இதை ஹிந்து நாடு ஆக்குகிறோம் என்று குழப்பத்தை உண்டாக்குவது பெரும் அழிவில் கொண்டுபோயி நிறுத்தும்.

மேலும், பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே,  இதுமாதிரி உண்ணாவிரதங்களை உண்டாக்கி ஹிந்துத்துவா தங்கள் மீது உள்ள களங்கத்தை துடைத்து விட முடியாது.

ஆர்.எஸ்.எஸ்.  பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியா முழுவதும் நடத்திய தீவிரவாத செயல்களுக்கு தண்டிக்கபட்டே ஆவார்கள். இதில் சட்டம் தன் கடமையை எப்படி செய்கிறது என்பதை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza