குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் சீசன் தொடங்கிய சில நாட்களில் தண்ணீர் வரத்து குறைந்தது.
மேலும் மழை பெய்யாததால் சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் குற்றாலம்,தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதமான சீசனை அனுபவிக்க குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment