Friday, June 3, 2011

அண்ணா பிறந்தாளில் இலவச லேப்டாப் திட்டம் தொடக்கம்!

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது.தமிழக அரசின் செயல்திட்டங்களை விளக்கி ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தமிழக சட்டமன்றத்தில் வாசித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராமப் பகுதிகளில் உள்ள வணிக வெளிப்பணி மையங்கள் வலுவாக்கப்பட்டு தகவல் தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சி பரவலாக்கப்படும்.

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இந்த அரசு 2011 செப்டம்பர் 15-ஆம் நாள் முதல் தொடங்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிளஸ்-1, மற்றும் பிளஸ்-2 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

முதல் கட்டமாக 2011-2012ஆம் ஆண்டில் 9.12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza