Friday, June 3, 2011

"எய்ட்ஸ்" இந்தியாவுக்கு 10-வது இடம்!!

ஐ.நா: வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் பெண்கள் சுமார் 46 ஆயிரமும், ஆண்களில் சுமார் 49 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இளம் தலைமுறையினர் எய்ட்ஸ் பாதிப்பில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் சுமார் 2லட்சத்து 10 ஆயிரம் பெண்களும் 82 ஆயிரம் ஆண்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தொடர்ந்து நைஜீரியாவில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெண்களும் , ஒரு லட்சம் ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கென்யா நாடு இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் 60 சதவீதம் வரை வளரும் இளம் பெண்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலும் தென்னாப்ரிகாவில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டில் 15-24 வயதினரில் சுமார் 41சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயது கொண்டவர்களே அதிகமாகும். இவ்விசயத்தில் இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza