Sunday, June 19, 2011

அடுத்த கவர்னர் யார்? மார்கரெட் ஆல்வா மற்றும் நவீன் சாவ்லாவுக்கு வாய்ப்பு!

தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். சுர்ஜித் சிங் பர்னாலா ஓய்வு பெறுவதையடுத்து தமிழகத்துக்கு விரைவில் புதிய ஆளுனர் மத்திய அரசால் நியமிக்கப் படலாம் என டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சுர்ஜித் சிங் பர்னாலா திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக ஆளுனராக நியமிக்கப் பட்டவர். இன்றுடன் ஓய்வு பெரும் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு மாற்றாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா அல்லது  முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா ஆகியோரில் ஒருவர் தமிழக ஆளுனராக நியமிக்கப் படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வந்த நிலையில் ஆளுனர் நியமனம் குறித்த பேச்சுகளும் முதல்வர் பிரதமர் சந்திப்பில் இடம்பெற்று இருக்க கூடும் என்றும் தெரிகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza