அமெரிக்க அதிபர் ஒபாமாவை தேர்தலில் தோல்வி அடையச் செய்வது மிகவும் அவசியம் என்று லூசியானா மாகாணத்தின் ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் கூறியுள்ளார். நியூ ஆர்லியன்ஸ் நகரில், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பாபி ஜிண்டால் கூறியதாவது:
இந்த நாட்டை ஒபாமா நேசிக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், அவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் நாட்டுக்கு சிறந்தது என்று நினைக்கிறார். உண்மையில் அது பெரும் தோல்வியை தான் ஏற்படுத்துகிறது. அதிபர் பராக் ஒபாமா எங்கிருந்து வந்தார் என்பது குறித்து நான் கேள்வி கேட்க மாட்டேன். ஆனால், அவர் எங்கே செல்கிறார் என்பது பற்றி கேட்பேன் என்று கூறினார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாம் அனைவரும் முதலில் அமெரிக்கர்கள். எனவே, அதிபர் பதவிக்கு மரியாதை தரவேண்டும். ஒபாமாவை வெறுப்பது முட்டாள்தனமானது. ஆனால், அவரை தோற்கடிப்பது மிகவும் அவசியமானது என்றும் பாபி ஜின்டால் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, லாசியானா ஆளுநர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவேன் என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment