Sunday, June 19, 2011

இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று செயற்கை கோள்கள்: இஸ்ரோ தலைவர்!

"இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்" என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் திரவ இயக்க அமைப்பு மையத்தில் ராக்கெட் தொழில்நுட்பத்தின் எல்லைகள் விரிவாக்கம் குறித்த இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்குத் திரவ இயக்க அமைப்பு மையத்தின் இயக்குநர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்திய ஏரோநாட்டிகல் சங்க திருவனந்தபுரம் தலைவர் ரவீந்திரநாத் வரவேற்றார். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் வீரராகவன் கருத்தரங்கு மலரை வெளியிட்டார். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கேப்டன், திரவ இயக்க அமைப்பு மைய முன்னாள் இயக்குநர் முத்துநாயகம், இந்திய ஏரோநாட்டிகல் சங்க கவுரவ செயலாளர் அசோக்பூஷன், திரவ இயக்க அமைப்பு மைய இணை இயக்குநர் கணேசன் உள்ளிட்டோர் பேசினர்.இந்திய ஏரோநாட்டிகல் சங்க கவுரவ செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

கருத்தரங்கிற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ''இந்த ஆண்டு ஜூலை 2வது வாரம் தகவல் தொடர்புக்கான செயற்கை கோளும், செப்டம்பரில் மெகா டிராபிக் செயற்கை கோளும், டிசம்பரில் மேக கூட்டங்களைத் துல்லியமாக படம் பிடிக்கும் ஆர்.1 சாட் 1 செயற்கை கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது.
மகேந்திரகிரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3க்கு தேவையான சி-25, கிரையஜனிக் இன்ஜின் சோதனை மையம் அடுத்த 2 மாதங்களில் செயல்பட தொடங்கும்" என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza