Friday, June 3, 2011

தொழில் நுட்பரீதியில் ஊழல்!! தயாநிதி பதவி விலகவேண்டும்!!

ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
’’மத்திய ஜவுளித்துறை அமைச்சராக உள்ள தயாநிதி மாறன் மீது பல்வேறு புகார்கள் பல மாதங்களாகக் கூறப்பட்டு வந்தும், மத்திய அரசு வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.


தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போதும், துறை மாறிய பிறகும், ஊழல்களில் ஈடுபட்டது புகாராக வந்துள்ளதால், தயாநிதி மாறனை அமைச்சர் பொறுப்பில் இருந்து பிரதமர் பதவி விலகச் செய்து நடுநிலையான விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடந்துள்ள ஊழல்களில், தொழில் நுட்பரீதியில் மாபெரும் ஊழலை தயாநிதி மாறன் செய்துள்ளதாகப் புகார் வந்தால், பிரதமர் அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza