இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ள மின் அஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மின் அஞ்சல் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அனுப்பப்பட்டள்ளது.
முதல் கட்ட விசாரணையில் இந்த மின் அஞ்சல் மைலாப்பூரில் உள்ள ஒரு இணைய தள மையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அங்கு சென்று விசாரணை நடத்தியும் அதனை அனுப்பிய நபர் யார் என கண்டறிய முடியவில்லை. எனவே இணையதள குற்றங்களை விசாரிக்கும் சைபர் கிரைம் காவல்துறையின் உதவி நாடப்பட்டுள்ளது. முதலில் பெங்களூரு தூதரகத்துக்கும் மின் அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி விரைவில் பிடிபடுவான் என காவல்துறை தெரிவித்துள்ளது. ராயப்பேட்டை உதவி கமிஷனர் விஜயகுமாரி, இன்ஸ்பெக்டர் கந்தவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment