சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் நெல்லை மண்டல மாநாடு சங்கர்நகரில் நடந்தது. மாநில துணைத்தலைவர் அனந்தராமன் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம், அவைத்தலைவர் மரியசூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் பேசினார். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 8 வது சட்டமாக தனியார் பள்ளிகளின் தரமான கல்விக்கு வேட்டு வைக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ததை வரவேற்கிறோம். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தில் தமிழக அரசு தலையிடாது என்ற அரசின் நல்ல நேர்மையான செயல்பாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துரைகள்:
Post a Comment