Saturday, May 28, 2011

சிரியாவில் கலவரம்: எட்டுப் பேர் பலி

சிரியா நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையினால் பொதுமக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன. இதன் விளைவாக, எதிர்ப்பாளர்களில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) சிரியா தலைநகர் டமஸ்கஸிலும் அதன் தெற்கேயும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
'டேல் நகரில் மூவரும் டமஸ்கஸின் கதானா குடியிருப்பில் மூவரும் ஸபாதானி குடியிருப்பில் ஒருவரும், லட்டாகிய்யா அருகில் ஒருவருமாகப் பொதுமக்களில் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர்' என லெபனானைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அமைப்பின் கண்காணிப்பாளர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்தள்ளார்.
வெள்ளிக்கிழமை இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நிலையில், எதிர்ப்பாளர்கள் அரச கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் இடம்பெறல்வேண்டும் என்ற தமது கோரிக்கையை முன்வைத்தவர்களாகத் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு அலையினால் பொதுமக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன. இதன் விளைவாக, எதிர்ப்பாளர்களில் எட்டுப் பேர் பலியாகியுள்ளனர் என அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் தரும் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (27.05.2011) சிரியா தலைநகர் டமஸ்கஸிலும் அதன் தெற்கேயும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
"டேல் நகரில் மூவரும் டமஸ்கஸின் கதானா குடியிருப்பில் மூவரும் ஸபாதானி குடியிருப்பில் ஒருவரும், லட்டாகிய்யா அருகில் ஒருவருமாகப் பொதுமக்களில் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர்" என லெபனானைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அமைப்பின் கண்காணிப்பாளர் ரமி அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இறந்தவர்களின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நிலையில், எதிர்ப்பாளர்கள் அரச கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் இடம்பெறல் வேண்டும் என்ற தமது கோரிக்கையை முன்வைத்தவர்களாகத் தொடர்ந்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் படுகொலைகளுக்குப் பின்னணியில் அரச பாதுகாப்புப் படை இருப்பதாக எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டும் அதேவேளை, இக்கொலைகள் ஆயுதந் தரித்த கும்பல்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், இவை வெளிநாட்டிலிருந்து ஒருசில தீயசக்திகளால் திட்டமிட்ட முறையில் ஒழுங்குசெய்யப்பட்ட சதிகளே என்றும் சிரிய அரசாங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza