Saturday, May 28, 2011

ஆக்கிரமிப்புப்படைத் தாக்குதலில் மூன்று பலஸ்தீன் மீனவர் படுகாயம்

கடந்த வியாழக்கிழமை (26.05.2011) மாலையில் கான் யூனிஸ் பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பலஸ்தீன் மீனவப்படகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் மூன்று பலஸ்தீன் மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இயந்திரப் படகு ஏழு மீனவர்கள் பயணித்த பலஸ்தீன் மீன்படிப் படகினை விரட்டிவந்து வேகமாக மோதியதில் மூன்று மீனவர்கள்  படுகாயமடைந்ததோடு, அவர்களின் படகு மிகமோசமாகச் சேதமடைந்தது.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட படகையும் மீனவர்களையும் பலஸ்தீன் கடற்படை மீட்புக்குழுவினர் கண்டு கரைசேர்த்துள்ளனர். எலும்புகள் முறிவுற்ற நிலையில் மிக மோசமாகப் படுகாயமடைந்த மீனவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன் கடற்படை மீட்புக் குழுவின் பணிப்பாளர் கேப்டன் யஹ்யா யட தாயிஹ் குறிப்பிடுகையில், சேதமடைந்த படகை மீனவர்களின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் தமத குழு பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தது எனவும், பலஸ்தீன் மீனவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையால் கட்டவிழ்த்து விடப்படும் அக்கிரமச் செயல்கள் வருடக்கணக்கில் தொடர்கதையாக நீளும் ஒரு விடயமே தவிர இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பலஸ்தீன் மக்கள் பல்முனையிலும் அனுபவித்துவரும் துன்பங்களில் இது ஒரு சிறு துளி மட்டுமே என்று விசனம் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (26.05.2011) மாலையில் கான் யூனிஸ் பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றிருந்த பலஸ்தீன் மீனவப்படகு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் காட்டுமிராண்டித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் மூன்று பலஸ்தீன் மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் இயந்திரப் படகு ஏழு மீனவர்கள் பயணித்த பலஸ்தீன் மீன்படிப் படகினை விரட்டிவந்து வேகமாக மோதியதில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்ததோடு, அவர்களின் படகு மிகமோசமாகச் சேதமடைந்தது.
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட படகையும் மீனவர்களையும் பலஸ்தீன் கடற்படை மீட்புக்குழுவினர் கண்டு கரைசேர்த்துள்ளனர். எலும்புகள் முறிவுற்ற நிலையில் மிக மோசமாகப் படுகாயமடைந்த மீனவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலஸ்தீன் கடற்படை மீட்புக் குழுவின் பணிப்பாளர் கேப்டன் யஹ்யா யட தாயிஹ் குறிப்பிடுகையில், சேதமடைந்த படகை மீனவர்களின் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் தமது குழு பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தது எனவும், பலஸ்தீன் மீனவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையால் கட்டவிழ்த்து விடப்படும் அக்கிரமச் செயல்கள் வருடக்கணக்கில் தொடர்கதையாக நீளும் ஒரு விடயமே தவிர, இன்று நேற்று நடக்கும் ஒரு நிகழ்வல்ல. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் பலஸ்தீன் மக்கள் பல்முனையிலும் அனுபவித்துவரும் துன்பங்களில் இது ஒரு சிறு துளி மட்டுமே என்று விசனம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza