Saturday, May 28, 2011

கேரளாவில் ”எண்டோசல்பான்” உற்பத்திக்கான உரிமம் ரத்து!

கேரளாவில் ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அடூர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் முந்திரித் தோட்டங்களில் ”எண்டோசல்பான்” பூச்சி கொல்லி மருந்து உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவும், பொதுமக்களுக்கு பல நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் மாநிலம் முழுதும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் தடை விதிக்கக் கோரி பல போராட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடத்தப்பட்டன.

கேரளாவில் பொதுத் துறை நிறுவனமான, ஹிந்துஸ்தான் பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனம், எண்டோசல்பானை உற்பத்தி செய்து வருகிறது. இப்போது அதன் உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்ய, கேரள அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza