சென்னை பல்லாவரம் புறநகர் பகுதியில் வசிக்கும் நியாமதுல்லா (37) மற்றும் அவரது மனைவி மும்தாஜ் பேகம் (36) உறவினரின் மரணத்தையொட்டி துக்கம் விசாரிக்க திரு.வி.க நகருக்குத் தங்கள் மூன்று வயது மகன் அஸ்மதுல்லாவுடன் சென்றுள்ளனர்.
பகல் 1:00 மணியளவில் உறவினரின் வீட்டுக்குச்சென்ற அவர்கள், மகன் காரில் உறங்கியதைக் கவனிக்காமல் கணவருடன் சென்றிருக்கூடும் என்று மனைவியும், மனைவியுடன் இருக்கக்கூடும் என்று கணவரும் நினைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.
துக்கவீட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருவரும் மூன்றுமணி நேரம் கழித்தே சந்தித்துள்ளனர். அப்போது குழந்தை எங்கே என்று ஒருவரை ஒருவர் விசாரிக்கும்போதுதான் பின்சீட்டில் உறங்கியதை உணர்ந்து பதறியபடி காரை நோக்கிச்சென்றுள்ளனர்.
திறந்தவெளியில் நிறுத்தப்பட்ட காரின் கதவுகளும் பூட்டப்பட்டிருந்ததால் கோடை வெப்பம் காரணமாக காருக்குள் வெப்பம் அதிகரித்து சுவாசிக்கத் தேவையான காற்றின் அளவும் குறைந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து காருக்குள் அடைப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
உடனடியாக குழந்தையை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்து பலமணிநேரம் ஆகிவிட்டதால் 'கோல்டன் அவர்' (GOLDEN HOUR) என்று சொல்லப்படும் உயிர் பிழைக்க வாய்ப்புள்ள நேரம் கடந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment