Saturday, May 28, 2011

ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணையும் 12 ஐரோப்பிய நாடுகள்

ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மனிதாபிமான மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்கள் முதலான பலதரப்பினரும் இணைந்து பயணிக்கவுள்ள இந்த நிவாரண உதவிக் குழுவினர் தமது இலக்கினை தடைகள் இன்றி வெற்றிகரமாகச் சென்றடைய உரிய ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் தனது அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக 1.7 மில்லியன் பலஸ்தீன் மக்கள் அநியாயமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்றியமைக்கும் எதிர்பார்ப்போடு காஸாவை நோக்கிப் பயணிப்பதற்காக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலான நிலையையும் மீறி எதிர்பார்த்ததையும் விட அதிகமான கப்பல்கள் தமது குழுவில் இணைந்துள்ளன என்றும், தமது உன்னத இலக்கினை அடையப் பெறுவதற்காக எத்தகைய விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
ரமி அப்து தன்னுடைய அறிக்கையில், ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என்ற எகிப்திய தரப்பின் முடிவானது பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும் என்றும், இந்த முன்னெடுப்பு சரியான திசையிலான ஒரு பயணத்துக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளதோடு, எல்லையூடான போக்குவரத்து வரையறைகளும் கட்டுப்பாடுகளும் தனிமனிதர்களுக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, பொருட்களுக்குரியதாக அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதுவரை காலமும் காஸா மக்களுக்குத் தேவையான பொருட்கள் யாவும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லைக்கடவைகள் ஊடாகவே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அது அம்மக்களைச் சென்றடைய மிக நீண்டகாலம் எடுக்கின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் முதலான, மிகத் துரிதமாக காஸா மக்களைச் சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான தேவை அங்கு அதிகமாக உள்ளது என ரமி அப்து சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் நிவாரண உதவிக்குழுவைச் சேர்ந்த கப்பல்கள் மீது சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கிய செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு விசாரணை என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டனர். இதனால், துருக்கி-இஸ்ரேலிய நல்லுறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் மிகப்பெரும் கண்டனங்களை எதிர்கொண்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.
"ஃப்ரீடம் புளோடில்லா-2" இல் இணைவதற்கு 12 ஐரோப்பிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முறியடிப்பதற்கான ஐரோப்பிய அமைப்பு கடந்த வியாழக்கிழமை (26.05.2011) தெரிவித்துள்ளது.
 
மேற்படி அமைப்பின் பேச்சாளர் ரமி அப்து தெரிவிக்கையில், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் ஏனைய 8 ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து காஸா மக்களுக்கான நிவாரண உதவிக் குழுவில் பங்குகொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், மனிதாபிமான மற்றும் சமாதானச் செயற்பாட்டாளர்கள் முதலான பலதரப்பினரும் இணைந்து பயணிக்கவுள்ள இந்த நிவாரண உதவிக் குழுவினர், தமது இலக்கினை தடைகள் இன்றி வெற்றிகரமாகச் சென்றடைய உரிய ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் வழங்க முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் தனது அமைப்பின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக 1.7 மில்லியன் பலஸ்தீன் மக்கள் அநியாயமாக முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நிலையை மாற்றியமைக்கும் எதிர்பார்ப்போடு காஸாவை நோக்கிப் பயணிப்பதற்காக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாம் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலான நிலையையும் மீறி எதிர்பார்த்ததையும் விட அதிகமான கப்பல்கள் தமது குழுவில் இணைந்துள்ளன என்றும், தமது உன்னத இலக்கினை அடையப் பெறுவதற்காக எத்தகைய விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ரமி அப்து தன்னுடைய அறிக்கையில், ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என்ற எகிப்திய தரப்பின் முடிவானது பலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஆரோக்கியமான ஆரம்பமாகும் என்றும், இந்த முன்னெடுப்பு சரியான திசையிலான ஒரு பயணத்துக்கான சமிக்ஞையாக அமைந்துள்ளதோடு, எல்லையூடான போக்குவரத்து வரையறைகளும் கட்டுப்பாடுகளும் தனிமனிதர்களுக்குரியதாக இருக்கவேண்டுமே தவிர, பொருட்களுக்குரியதாக அமையக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதுவரை காலமும் காஸா மக்களுக்குத் தேவையான பொருட்கள் யாவும் இஸ்ரேலியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள எல்லைக்கடவைகள் ஊடாகவே எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. அது அம்மக்களைச் சென்றடைய மிக நீண்டகாலம் எடுக்கின்றது. மருந்து, மருத்துவ உபகரணங்கள் முதலான, மிகத் துரிதமாக காஸா மக்களைச் சென்றடைய வேண்டிய பொருட்களுக்கான தேவை அங்கு அதிகமாக உள்ளது என ரமி அப்து சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்து "ஃப்ரீடம் புளோடில்லா" நிவாரண உதவிக்குழுவைச் சேர்ந்த கப்பல்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மேற்கொண்ட காட்டுமிராண்டித் தாக்குதலினால் 9 துருக்கிய செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு, 'விசாரணை' என்ற பெயரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டு பல்வேறு வகையிலும் அவமானப்படுத்தப்பட்டனர். இதனால், துருக்கி-இஸ்ரேலிய நல்லுறவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, உலகளாவிய ரீதியில் இஸ்ரேல் மிகப்பெரும் கண்டனங்களை எதிர்கொண்டமை இங்கு நினைவுகூறத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza