பலஸ்தீன் சட்டப் பேரவையின் இணைப் பேச்சாளரான கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் ஓமானுக்கு அரசியல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் ஓமான் அரச அதிகாரிகளுடன் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்திய கலாநிதி பஹ்ஹார், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவும் பலஸ்தீன் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஓமானிய அரசு உறுதுணையாக நிற்கவேண்டிய அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.
கலாநிதி பஹ்ஹார் மற்றும் அவருடன் சென்ற இரு பிரமுகர்கள் ஆகியோரை ஓமானின் வெளிநாட்டு அமைச்சர் யூஸுப் பின் அலவி வரவேற்றார். பலஸ்தீன் பிரமுகர்கள் மூவரும் ஓமானிய அபிவிருத்தித் திட்ட அமைச்சர் மற்றும் முக்கிய பல ஓமானியப் பிரமுகர்களைச் சந்தித்தனர்.
பலஸ்தீன் பிரச்சினை தொடர்பில் ஓமானிய முடியரசின் நிலைப்பாடு குறித்து பஹ்ஹார் ஓமானிய அரச பிரமுகர்களிடம் வினவியபோது, பலஸ்தீனின் உள்ளக நிலவரம் சீராவது குறித்துத் தமது மகிழ்ச்சியையும் கரிசனையையும் வெளிப்படுத்தியதோடு, பலஸ்தீனக் குழுக்களுக்குள் பரஸ்பரப் புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் ஏற்பட வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும் வலியுறுத்தினர்.
0 கருத்துரைகள்:
Post a Comment