லண்டன்:இஸ்ரேல் அதிபர் ஷிமோன் ஃபெரஸ் பிரிட்டனுக்கு சுற்றுப் பயணம் செய்வதை கண்டித்து லண்டனில் பிரம்மாண்ட கண்டன போராட்டம் நடைபெற்றது.
ராயல் இன்ஸ்ட்யூட் ஆஃப் இண்டர்நேசனல் அஃபேயர்ஸின்(சதம் ஹவுஸ்) முன்பு நடந்த கண்டனப் போராட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி இஸ்ரேல்-பிரிட்டன் தூதரக உறவை கொண்டாடும் நிகழ்ச்சியில் ஃபெரஸ் பங்கேற்றார். ஃபெரஸ் ஒரு குற்றவாளி! அவர் மீது இனப் படுகொலைக்கான குற்றத்தை சுமத்த வேண்டும்! என போராட்டத்தில் கலந்துகொண்டோர் முழக்கமிட்டனர்.
இனப் படுகொலைக்கு தலைமை வகிக்கும் ஃபெரஸை இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவைக் குறித்து பாடம் நடத்த அனுமதித்த சதம் ஹவுஸின் நடவடிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தியதாக நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பிரிட்டனில் ஃபலஸ்தீன் ஃபாரத்தின் செய்தித் தொடர்பாளர் ஸாஹிர் பைராவி தெரிவித்தார்.
மேற்காசியாவிற்கும்,வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பிரிட்டனிலிருந்து ஆயுதங்கள் ஏற்றுமதிச் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பது போலவே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பதற்கு எதிராகவும் கடுமையான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென எம்.பி-யான ரிச்சார்டு பர்டன் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment