ரோம்:இத்தாலியின் லேம்பெடூசா தீவிற்கு அருகே மத்திய தரைக்கடலில் படகு மூழ்கியதில் 150 பேர் காணாமல் போயுள்ளனர்.இவர்களை தேடும் பணி தொடர்கிறது.200 பேருடன் புறப்பட்ட படகிலிருந்து 48 பேரை இத்தாலி மீட்பு பணியாளர்கள் மீட்டனர்.
லேம்பெடூசா தீவிலிருந்து 70 கி.மீ தொலைவில் படகு மூழ்கியது.15 நபர்களின் இறந்த உடல்களை மீட்பு பணியில் ஈடுபட்டிருப்போர் கண்டெடுத்ததாக செய்தி ஏஜன்சிகள் கூறுகின்றன. படகில் பயணம் செய்த பெரும்பாலோர் துனூசியாவிலிருந்து சென்ற அகதிகளாவர்.
காலநிலையும், இருளும் மீட்பு பணியை பாதித்துள்ளதாக இத்தாலி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.துனீசியாவிலிருந்து அகதிகள் அதிகமாக இத்தாலி தீவுக்குள் நுழைவதை தடுப்போம் என துனீசியா இத்தாலிக்கு உறுதி அளித்திருந்தது.கடந்த ஜனவரி மாதத்தில் துனீசியாவில் நடந்த மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஏராளமானோர் இத்தாலிக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment