டெல்அவீவ்:ஜெருசலத்திலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் 942 புதிய குடியிருப்பு கட்டிடங்களை கட்டுவதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.இஸ்ரேல் அதிபர் ஷிமன் ஃபெரஸும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வாஷிங்டனில் வைத்து ஃபலஸ்தீன் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.
இதற்கிடையில் புதிய குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.ஃபலஸ்தீன் பூமியில் இஸ்ரேலின் குடியிருப்பு நிர்மாணங்களை நிறுத்திவைக்கவேண்டுமென அமெரிக்க முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது.
கிலோவில் புதிய வீடுகளை இஸ்ரேல் கட்டிவருவதாக ஜெருசலம் நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.2009 நவம்பரில் அனுமதியளித்த கட்டிட குடியிருப்புகள் இதில் அடங்காது.2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கும் அமெரிக்காவும்,ஐ.நாவும் எதிர்ப்புத்தெரிவித்திருந்தன.
இஸ்ரேலின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது என ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் எரகாத் கூறியுள்ளார்.சர்வதேச சட்டங்களுக்கு இஸ்ரேல் கட்டுப்படுவதற்கு அந்நாட்டின் மீது நிர்பந்தம் அளிக்க சர்வதேச சமூகத்திற்கு எரகாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் ஐந்து லட்சம் யூதர்கள் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமாக வசித்து வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment