ஜெய்ப்பூர்:பா.ஜ.க பொதுச்செயலாளரும் முன்னாள் ராஜஸ்தான் மாநில முதல்வருமான வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு எதிரான ஊழல் புகாரை மீண்டும் விசாரிக்கக்கோரி மாநில அரசு சமர்ப்பித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளது.
வசுந்தரா ராஜேவுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.என்.மாத்தூர் கமிஷன் மீண்டும் விசாரணையை துவக்கக்கோரி அசோக் கெலாட் அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவி வகித்த வசுந்தரா ராஜே சிந்தியா 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அப்புகாரை விசாரிக்க மாத்தூர் கமிஷன் உருவாக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:
Post a Comment