குவஹாத்தி:நேற்று நடந்த அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மன்மோகன்சிங் தனது வாக்குரிமையை உபயோகிக்க தவறினார்.அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூர் சட்டமன்ற தொகுதியில் 175-வது எண் வாக்குச்சாவடியான திஸ்பூர் உயர்நிலைப்பள்ளி வாக்காளர்கள் பட்டியலில் 7210-வது வாக்களராக பிரதமர் மன்மோகன்சிங் இடம் பெற்றுள்ளார்.
அவருடைய மனைவி குருசரன் கவுருக்கும் இத்தொகுதியில்தான் வாக்குரிமை உள்ளது. பிரதமருக்கு வாக்களிக்க இயலவில்லை என தேர்தல் அதிகாரி ஜெ.பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அஸ்ஸாம் முதல்வர் ஹித்தேஷ்வர் ஸைக்கியாவின் மனைவி ஹெமோப்ராவா ஸைக்கியாவின் குடும்ப வீட்டில் வாடகைக்கு வசிப்பவர்களாக பிரதமரும், அவருடைய மனைவியும் உள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பிரதமர் வாக்களிக்கவில்லை. ஆனால், தபால் மூலமாக வாக்களிக்க பிரதமருக்கு இயலாது. தேர்தல் அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே தபால் மூலமாக வாக்களிக்க இயலும். இன்று முதல் கஸக்ஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு ஐந்து தினங்கள் சுற்றுப்பயணம் செல்வதால் பிரதமருக்கு வாக்களிக்க இயலவில்லை என கூறப்படுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment