கொல்கத்தா:கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிலும் நான்கு மாணவிகளை ரெயிலில் வைத்து ஒரு கும்பல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது.
மாணவிகளுடன் சென்ற இளைஞரை கம்புகளால் தாக்கிவிட்டு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது இந்த வெறிப்பிடித்த கும்பல். அமிர்ஸர் ரெயிலில் வாரணாசியிலிருந்து வந்துக்கொண்டிருந்த மாணவிகளை ரெயில் பெட்டிக்குள் வைத்து இந்த அக்கிரமச்செயல் நடந்துள்ளது.
டிக்கெட் எடுக்காமல் வாரணாசியிலிருந்து ரெயிலில் ஏறிய சில இளைஞர்களைக் கொண்ட கும்பல் முன்பதிவுச் செய்யப்பட்ட கம்பார்ட்மெண்டில் சீட்டுகளை ஆக்கிரமித்தனர். இதனை தட்டிக்கேட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவிகள் இந்த அக்கிரமத்திற்கு பலியாகியுள்ளனர். பல்கலைக்கழக ஆய்வு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஹவ்ராவிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர் இந்த மாணவிகள்.
கடந்த சில காலமாக ரெயில்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. கேரளாவைச் சார்ந்த ஒரு பெண்மணி ஒரு வெறியனால் ரெயிலிருந்து கீழே தள்ளப்பட்டு கொல்லப்பட்டார். விளையாட்டு வீராங்கனையொருவர் வழிப்பறிக் கொள்ளையனால் ரெயிலிருந்து கீழே தள்ளப்பட்டு ஒரு காலை இழந்தார். தற்போது இந்த பாலியல் பலாத்கார அக்கிரமம் நிகழ்ந்துள்ளது.
மத்திய ரெயில்வே துறை ரெயில்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் மெத்தனமாக இருக்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ரெயில் பயணம் அச்சம் மிகுந்ததாக மாறுமா? அல்லது அரசு உடனடியாக நடவடிக்கைகள மேற்கொள்ளுமா?

0 கருத்துரைகள்:
Post a Comment