டமாஸ்கஸ்:சிரியாவின் நகரமான ஹோம்ஸில் 17 எதிர்ப்பாளர்களை போலீஸ் அநியாயமாக சுட்டுக்கொன்றது. அரசுக்கெதிரான போராட்டம் நாடுமுழுவதும் கிளர்ந்தெழுந்துள்ள சூழலில் இந்த அக்கிரம சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைது செய்யப்படுவோம் என அஞ்சி காயமடைந்தோர் மருத்துவமனைக்கு சிகிட்சைக்காக செல்லவில்லை.
மருத்துவமனைகளில் தேவைக்குரிய இரத்தம் இல்லாததும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதியத் தொழுகைக்குப் பிறகு மரணித்தவர்களை அடக்க நிகழ்ச்சி தீர்மானிக்கப்பட்ட பிறகும் மிகவும் தாமதமாகவே நடந்தேறியது.
ஹோம்ஸின் அருகிலுள்ள தால்பிஸெஹிலில் மோதல் நடந்தேறியது. ஆயுதம் ஏந்தியவர்கள் சாலையில் தடை ஏற்படுத்தியதாக அரசு வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. வெளிநாட்டினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இரண்டு போலீசார் மரணித்துள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சிவிலியன்கள் வேடத்தில் வந்த போலீஸார் பிரச்சனைகளை உருவாக்கியதாக எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment