Tuesday, April 19, 2011

சுனில்ஜோஷி கொலை வழக்கு:என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு எதிராக ம.பி பா.ஜ.க அரசு

dewas
போபால்:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுனில் ஜோஷியின் படுகொலைத் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் தீர்மானத்திற்கு மத்திய பிரதேச மாநில பா.ஜ.க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு வெளியிட்ட உத்தரவைக் குறித்து கேள்வி எழுப்பி ம.பி அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஜோஷி கொல்லப்பட்ட 2007-ஆம் ஆண்டில் என்.ஐ.ஏ துவங்கப்படவில்லை. ஆதலால், என்.ஐ.ஏவிடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது என ம.பி பா.ஜ.க அரசின் வாதமாகும்.

சுனில் ஜோஷி கொலை வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பதுக் குறித்து ம.பி பா.ஜ.க அரசு தயங்கியதை பொருட்படுத்தாமல் வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பதாக முன்னர் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி என்.ஐ.ஏ உள்ளூர் நீதிமன்றத்தை அணுக இருக்கும் வேளையில் இதனை கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது ம.பி பா.ஜ.க அரசு.

மாநில போலீஸ் பிரக்யாசிங் உள்பட இவ்வழக்கில் சில குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளதாகவும், வழக்கு விசாரணை நடந்துவருவதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தலைமை வகிக்கும் ம.பி அரசு மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும், இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவருமான சுனில் ஜோஷி அஜ்மீர் குண்டுவெடிப்பு நடப்பதற்கு சற்று முன்பு தனது வீட்டிற்கு முன்பு வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவா பெண் பயங்கரவாதி பிரக்யாசிங் தாக்கூர் உள்பட சங்க்பரிவார தலைவர்களுக்கு சுனில் ஜோஷியின் படுகொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளியானது.

2007-ஆம் ஆண்டு நடந்த சுனில் ஜோஷி கொலைவழக்கு விசாரணையை ம.பி பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது. இவ்வழக்கை என்.ஐ.ஏ ஏற்றுக்கொள்ளும் என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அதனை தடுக்கும் விதமாக வழக்கில் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்து, போலீஸ் விசாரணை நடத்திவருவதாக பாசாங்கு காட்டுகிறது ம.பி பாசிச பா.ஜ.க அரசு.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித்,அஜ்மீர்,முதல் மலேகான் குண்டுவெடிப்புகளுக்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்ட சுனில் ஜோஷியின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தால் எல்லா குண்டுவெடிப்புகளின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்க்க இயலுமென என்.ஐ.ஏ கருதுகிறது.

ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீர்மானித்ததற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆதரவு தெரிவித்த பொழுதும், ம.பி. பா.ஜ.க அரசு தடையாக நிற்பதற்கு காரணம், சங்க்பரிவார் தலைவர்களின் தொடர்பு வெளியாகிவிடும் என்ற அச்சமே காரணமாகும் என கருதப்படுகிறது.

ஆனால், ம.பி பா.ஜ.க அரசு அனுப்பிய கடிதத்திற்கு தெளிவான பதில்களை அளித்து மாநில அரசுக்கு அனுப்பியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza