Tuesday, April 5, 2011

ஐரோப்பாவில் தீர்வைத்தேடி கத்தாஃபியின் பிரதிநிதி


obeidi_1863334c

 

திரிபோலி:மேற்கத்திய ராணுவத்தின் தாக்குதல் வலுவடைந்ததைத் தொடர்ந்து லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் பிரதிநிதியான வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அப்துல் ஆதி அல் உபைதி கிரீஸ் தலைநகரான ஏதன்ஸிற்கு வருகைத் தந்துள்ளார்.
லிபியா சந்திக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வைத்தேடி லிபியா பிரதிநிதி வந்துள்ளதாக க்ரீஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் திமித்ரீஸ் த்ரோத்ஸாஸ் தெரிவித்துள்ளார். பின்னர் துருக்கியின் அங்காராவுக்கு சென்ற உபைதி அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தேவ்தோக்லுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எதிர் தரப்பினருடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வதுத் தொடர்பான காரியங்கள் விவாதிக்கப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உபைதி க்ரீஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு பிரதமர் ஜார்ஜ் பவன்ட்ரூவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பவன்ட்ரூ  லிபியா விவகாரம் தொடர்பாக துருக்கி பிரதமர் உருதுகானுடனும், கத்தர்-பிரிட்டன் தலைவர்களுடனும் விவாதித்தார்.
லிபியாவில் அரசியல், ராஜதந்திர தீர்வை காண தாங்கள் தயார் என க்ரீஸ் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேவேளையில், கத்தாஃபியின் மகன்களான ஸைஃபுல் இஸ்லாம் மற்றும் ஸாஇதி ஆகியோர் கத்தாஃபியை பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு சமரச பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் ப்ரீகாவில் எதிர்ப்பாளர்கள் முன்னேற்றமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கத்தாஃபியின் ராணுவம் அப்பகுதியிலிருந்து பின்வாங்கியுள்ளது. மிஸ்ரத்தாவிலிருந்து காயமடைந்தவர்களுடன் புறப்பட்ட துருக்கி கப்பல் பெங்காசிக்கு வந்துள்ளதாக தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றனர்.
விமானத்தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதற்காக விமானங்களை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளதாக நேட்டோ தெரிவிக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza