மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர் ராவ் தேர்தல் அதிகாரியைத் தாக்கிய மத்திய மந்திரி மு.க.அழகிரியை அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கோயிலுக்குச் சென்ற போது தேர்தல் அதிகாரி காளிமுத்துவும் விடியோ கிராபர் ஒருவரும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களால் தாக்கப் பட்டதாக வழக்கு பதிவு செய்யப் பட்டது. இது குறித்துப் தெரிவித்த முரளிதர் ராவ் தேர்தல் அதிகாரி தாக்கப் பட்டது ஜனநாயகத்துக்கு விடப் பட்ட மிரட்டல் என்றும் தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியைச் செய்ய விடாமல் தடுக்கப் படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப் பட்ட தேர்தல் அதிகாரி காளிமுத்து தம்மையும் விடியோ கிராபரையும் யாரும் தாக்க வில்லை என்றும் கீழவளவு காவல் துறையினர் தான் அவ்வாறு கூறினர் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment