Tuesday, April 19, 2011

ஆஸாத் என்கவுண்டர்:சி.பி.ஐ விசாரணை நடத்தும்

azath_100829
புதுடெல்லி:மாவோயிஸ்ட் தலைவர் செருகுரி ராஜ்குமார் என்ற ஆஸாத், பத்திரிகையாளர் ஹேமச்சந்திர பாண்டே ஆகியோரின் என்கவுண்டர் கொலை குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும்.

சி.பி.ஐ விசாரணை நடத்துவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோடா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற டிவிசன் பெஞ்ச் ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்
க தயார் என ஆந்திர அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இதுத்தொடர்பாக அறிவிக்கை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு இம்மாதம் 25-ஆம் தேதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு முன்பு அறிவிக்கையை வெளியிட உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

ஒரு தேசம் அதன் மக்களை கொலைச் செய்யக்கூடாது என முன்னர் இவ்வழக்கை பரிசீலிக்கவே உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி ஆந்திர பிரதேச மாநிலம் அடிலாபாத்தில் போலீசுடன் நடந்த மோதலில் ஆஸாதும், ஹேமச்சந்திர பாண்டேயும் கொல்லப்பட்டனர் என அரசு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்திருந்தது. ஆனால், நாக்பூரில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸ் போலி என்கவுண்டர் நாடகம் நடத்தியதாக மாவோயிஸ்டுகள் குற்றஞ்சாட்டினர்.

சி.பி.எம்(மாவோயிஸ்ட்) இயக்கத் தலைவரான ஆஸாதின் தலைக்கு ரூ.12 லட்சம் ரூபாய் பரிசாக அரசு நிர்ணயித்திருந்தது. கொலைச் செய்யப்படும் பொழுது ஆஸாதின் சட்டைப் பையில் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகுமாறு கோரும் சுவாமி அக்னிவேஷின் கடிதம் இருந்தது.

சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதுத் தொடர்பாக பயணித்த பொழுதுதான் போலீஸ் ஆஸாதை பிடித்துக் கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

போஸ்ட் மார்ட்டம் அறிக்கையில் மிக அருகிலிருந்து ஆஸாதும், பாண்டேவும் கொல்லப்பட்டதாக தெளிவானது.
சுவாமி அக்னிவேஷ், ஹேமச்சந்திர பாண்டேயின் மனைவி பினேதா ஆகியோர் தனியாக விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza