ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக பிரத்யேகமாக சில வாக்குறுதிகளை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அள்ளி வீசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளவை:
உங்களது தொகுதியில் உங்களின் அன்பு சகோதரியாக நான் வேட்பாளராக இருக்கிறேன். எனது பூர்வீகம் ஸ்ரீரங்கம் தான். நான் உங்களது உள்ளூர் பிரச்னையும் நன்கு அறிவேன்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலைச்சுற்றி 100 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்கள் நிலங்களை வாங்க முடியாமலும், விற்க முடியாத சூழலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மழை காலங்களில் அடிக்கடி ஸ்ரீரங்கம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காணப்படும்.
சரிவர செயல்படுத்தாத மணிகண்டம் கூட்டு குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
புங்கனூர், கள்ளிக்குடி ஏரியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுவதால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளின் துயரம் துடைக்கப்படும்.
கோரையாறு, அரியாறு குறுக்கே பாலம் கட்டப்படும்.
புங்கனூர்-அல்லித்துறை இடையே அரியாறு பாலம் கட்டப்படும்.
உய்யக் கொண்டான் திருமலை- இனியானூர் சாலையில் பாலம் அமைக்கப்படும்
இனாம்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லீம்கள் பெருமளவு வசிக்கின்றனர். அவர்களிடையே ஜெயலலிதா பேசியபோது, ""இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்படும். முறையாக வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்'' என்று வாக்குறுதி அளித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

0 கருத்துரைகள்:
Post a Comment