Monday, April 4, 2011

கோல்ட் ஸ்டோன் அறிக்கையை ரத்துச்செய்யவேண்டும்-இஸ்ரேல்

golston
ஜெருசலம்:2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் காஸ்ஸாவில் நடத்திய மிகக்கொடூரமான தாக்குதல் தொடர்பாக ஐ.நா சபையினால் நியமிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா நீதிபதி கோல்ட்ஸ்டோன் தலைமையினாலான விசாரணை கமிஷன் இஸ்ரேல் காஸ்ஸாவில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தியதாக கண்டறிந்தது.இந்த அறிக்கையை தயார் செய்த கோல்ட்ஸ்டோன் தனக்கு தவறு ஏற்பட்டிருக்கலாம் எனக்கூறியிருப்பதால் இவ்வறிக்கையை ரத்துச்செய்ய இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.
கோல்ட்ஸ்டோன் நேற்று முன்தினம் வாஷிங்டன் போஸ்டில் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.தற்பொழுது என்னால் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்கள்  அன்றைக்கு எனக்கு தெரிந்திருந்தால் எனது அறிக்கை வேறுவிதமாக அமைந்திருக்கும் என கோல்ட்ஸ்டோன் தெரிவித்திருந்தார்.
இச்சூழலில் கோல்ட்ஸ்டோனின் அறிக்கையை வரலாற்றின் குப்பைக்கூடையில் தூக்கி எறிய வேண்டுமென இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.
2008-09 காலக்கட்டத்தில் இஸ்ரேல் நடத்திய மிக அரக்கத்தனமான தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் உட்பட அப்பாவி மக்கள் 1400 பேர் படுகொலைச்செய்யப்பட்டனர்.சர்வதேச அளவில் தடைச்செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை காஸ்ஸாவில் உபயோகித்தது இஸ்ரேலின் சியோனிஷ அரசு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza