புதுடெல்லி:மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் மன்னிப்பு வழங்கியுள்ளார்.இதனைத்தொடர்ந்து இருவரின் மரணத்தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்படுகிறது.1997-ஆம் ஆண்டு முதல் மரண தண்டனையை எதிர்பார்த்திருக்கும் எஸ்.பி.பிங்களே 1999-ஆம் ஆண்டு மரணத்தண்டனை உறுதிச்செய்யப்பட்ட ஜெய் குமாரின் கருணை மனுக்களை பரிசீலித்த குடியரசு தலைவர் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்.
தன்னை விட்டு பிரிந்த மனைவிக்கு நெருங்கிய இருவரை கொலை செய்ததற்காக பிங்களேவிற்கு புனே செசன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.மும்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இத்தண்டனையை உறுதி செய்தது.ஜெய்குமார் மனைவியையும், குழந்தையையும் கொலைசெய்த குற்றத்திற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்.இவரது தண்டனையை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதிச்செய்திருந்தன.
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்ஸல் குருவின் கருணை மனு குடியரசு தலைவரின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.அப்ஸல் குருவின் கருணை மனுவின் மீதான தீர்ப்பிற்கு காலதாமதம் ஏற்படுவதைக்குறித்து எதிர்கட்சியான பா.ஜ.க சமீபத்தில் மத்திய அரசை விமர்சித்திருந்தது.அதேவேளையில், கருணை மனுக்களில் தீர்ப்பு வழங்குவதில் கால அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முன்னுரிமை அடிப்படையில் கருணை மனுக்களில் தீர்ப்பு வழங்கும் முறையை ப.சிதம்பரம் கடைபிடித்து வருகிறார்.13 மனுக்கள் இதுவரை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.ஒன்பது மனுக்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன
0 கருத்துரைகள்:
Post a Comment