Monday, April 4, 2011

லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சி.ஐ.ஏ ஏஜண்ட்-சண்டே எக்ஸ்பிரஸ்

cia
லண்டன்:லண்டனில் அபயம் தேடியுள்ள லிபியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா கவ்ஸா சி.ஐ.ஏ மற்றும் பிரிட்டீஷ் உளவுத்துறையின் ஏஜண்டாக இருக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.பிரிட்டனின் எம்.16 பிரிவின் தலைவர் ஜான் ஸ்டார்லட்டுடன் 2001-ஆம் ஆண்டு கவ்ஸா சந்தித்திருந்தார்.இந்த சந்திப்பு லண்டனில் வைத்து நடந்தது.அவ்வேளையில் திரிபோலியில் ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டை செயல்பட அனுமதிக்கலாம் என கவ்ஸா ஒப்புக்கொண்டதாக ’தி சண்டே எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் அல்காயிதாவின் செயல்பாடுகளை கண்காணிப்பது என்ற பெயரில் பிரிட்டீஷ் உளவாளிக்கு அனுமதி வழங்கப்பட்டது.நேற்று முன்தினம் கவ்ஸா துனீசியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்தார்.முஅம்மர் கத்தாஃபியின் நம்பிக்கைக்குரியவரான கவ்ஸாவின் மனமாற்றம் திடீரென ஏற்பட்டதல்ல என செய்தி கூறுகிறது.
1988-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் லாக்கர்பியில் பானாம் விமானத்தை குண்டுவைத்து தகர்த்ததில் கவ்ஸாவுக்கு பங்குண்டு என குற்றச்சாட்டு எழுந்தது.இச்சம்பவத்தில் 270 பேர் கொல்லப்பட்டனர்.பிரிட்டனுக்கு சென்றுள்ள கவ்ஸாவிடம் இதுத்தொடர்பாக விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza