இஸ்லாமாபாத்:உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவேன் என முன்னாள் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியும், முன்னாள் அதிபருமான பர்வேஷ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.
தாலிபான் உள்ளிட்ட இயக்கங்களின் கொலை மிரட்டல் நிலவிய பொழுதும் நாட்டிற்கு திரும்புவேன் என ஆல் பாகிஸ்தான் முஸ்லிம் லீகிற்கு(எ.பி.எம்.எல்) அனுப்பிய வீடியோ செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்தை பல முறை நெருக்கத்தில் கண்டுள்ளேன். எந்த சூழலையும் சந்திக்க தயார். இறைவனை அல்லாமல் வேறு எவருக்கும் நான் அஞ்சவில்லை என முஷாரஃப் வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
லாகூரில் நடந்த எ.பி.எம்.எல் கட்சியின் மாநாட்டில் முஷாரஃப் ஆற்றிய உரை அடங்கிய வீடியோ காட்டப்பட்டது. மாநாட்டுத் திடல் முஷாரஃபின் படங்களாலும், பேனர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து வெளியேறிய முஷாரஃப் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்துவருகிறார். 2008-ஆம் ஆண்டில் அதிபர் பதவியை ராஜினாமாச் செய்த முஷாரஃபின் அரசு பழிச்சாட்டியிருந்தது(impeachment).
2013-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு சமீபத்தில் முஷாரஃப் எ.பி.எம்.எல் என்ற கட்சியை துவங்கினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment