மதுரை 67 ஆவது வட்ட தி.மு.க., துணைச் செயலாளர் பரமசிவம். இவர் பொன்மேனி ஆதி திராவிடர் காலனியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த போது, மேற்கு தொகுதி தேர்தல் கண்காணிப்பாளர் ஜெயசிங் ஞானதுரை பிடிக்க முயன்றார்.
அப்போது,அவர் எடுத்து வந்த ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர், கணக்கெடுப்பு பட்டியல், 4900 ரூபாய் ஆகியவற்ரை கீழே போட்டு விட்டு, பரமசிவம் மாயமானார். அவற்றை எஸ்.எஸ்.காலனி போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை எம்.எம்.ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (54). இவர் வாக்காளர்களிடம் தி.மு.க.,விற்கு ஓட்டுப்போட்டால் பணம் தருவதாக கூறி, பிரசாரம் செய்தார். அவரை மத்திய தொகுதி கண்காணிப்பாளர் ஜெயராஜ் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் ஒப்படைத்தார்
0 கருத்துரைகள்:
Post a Comment