தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு ஓட்டு கேட்க வந்த கடையநல்லூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பீட்டல் அல்போன்ஸ் வாகனத்தை அப்பகுதி மக்கள் சூழ்ந்து முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 22ஆம் தேதி அன்று குடிநீர் பற்றாக்குறை காரணமாக கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கடையநல்லூர் 16,30 மற்றும் 31ஆம் வார்டு மக்கள், இன்று காலை தங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த கடையநல்லூர் தொகுதி வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் நகர்மன்ற தலைவர் காளிராஜ் வந்த வாகனங்ககளை முற்றுகையிட்டனர்.
பின்பு அவர்கள் தங்கள் பகுதியில் சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்குத் தோண்டப்பட்டிருந்த குடிநீர் குழாய் அடைப்பு பகுதியில் நடைபெற்றுவரும் பெரிய குழியைப் பார்வையிட்ட வேட்பாளரும் அவருடன் வந்த அனைவரும் 12மணி நேரத்தில் சரிசெய்வதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து அங்கு மக்கள் கலைந்து சென்றனர். ஓட்டுக்கேட்க வந்த நட்சத்திர வேட்பாளர் வாகனத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஷாஜஹான், கடையநல்லூரிலிருந்து.
- ஷாஜஹான், கடையநல்லூரிலிருந்து.
0 கருத்துரைகள்:
Post a Comment