2ஜி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் மருமகன் சென்னையில் திடீரென மரணம் அடைந்தார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தீபக் (30). இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மருமகன் ஆவார்.
ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள ஒரு தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு நேற்று தீபக் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஏற்கனவே தீபக் இறந்துவிட்டதாக பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே தீபக் இருந்ததாக பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் ராசாவின் நண்பர் சாதிக் பாஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment