Friday, April 8, 2011

வாகன சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

தர்மபுரி அருகே, செக்-போஸ்ட்டில் நடந்த வாகன சோதனையில், 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூரில் ஸ்டார் ஜுவல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், வெளிநாட்டிலிருந்து தங்க பிஸ்கட் வாங்கி, ஓசூரில் உள்ள தனிஷ்கா நிறுவனத்துக்கு பல்வேறு டிசைன்களில் தங்க நகைகளாக தயாரித்து வழங்குகிறது. நேற்று, ஸ்டார் ஜுவல்ஸ்க்கு வெளிநாட்டில் இருந்து வந்த, ஐந்து கிலோ தங்கத்தை சேலத்தில் உள்ள பன்னாட்டு வர்த்தக பரிமாற்ற செக்யூரிட்டியில் இருந்து எடுத்துவர, ஸ்டார் ஜுவல்ஸ் மேலாளர் கெய்டன்ஷா சேலம் சென்றார்.
அங்கிருந்து, 5 கிலோ தங்கம் மற்றும் அவற்றுக்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டு, காரில் ஓசூருக்கு அவர் திரும்பியபோது, தொப்பூர் செக்-போஸ்ட்டில் வருமானவரித்துறை, மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த, 5 கிலோ தங்கத்தை சந்தேகத்தின் பேரில், தர்மபுரி தாசில்தார் அலுவலகத்துக்கு எடுத்து வந்து ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். தங்கத்துக்கான, "இன்வாய்ஸ்' சரியாக இருந்தது. எனினும், வெளிநாட்டிலிருந்து தங்கம் பெற்றதற்கான சுங்கவரி, கம்பெனிக்கான இன்கம்டாக்ஸ் ஆகிய ஆவணங்கள் இல்லை.
உரிய ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு, தங்கத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதற்கான ஆவணங்களை கம்பெனி நிர்வாகம் ஒப்படைக்கும் என, மேலாளர் கெய்டன்ஷா தெரிவித்தார். "முழு ஆவணங்களையும் கம்பெனி ஒப்படைத்தால், தங்கம் திருப்பி வழங்கப்படும்” என, உதவி ஆட்சியர் மரியம் சாதிக் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza