ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தவர் பிடித்த மீனை வாயில் கவ்விக் கொணடு, இன்னொரு மீனை பிடிக்க முயற்சிக்கையில், சற்றும் எதிர்பாராதவிதமாக வாயில் கவ்வியிருந்த மீன் திடீரென நழுவி தொண்டைக்குள் பாய்ந்தது. இதனால் மூச்சுத் திணறி அவர் இறக்க நேர்ந்தது.
கேரள மாநிலம் குமாரகத்தை சேர்ந்தவர் மாதன் (41). இவர் ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மீன் சிக்கியது. அதை உயிருடன் வாயில் கவ்வி வைத்துக் கொண்டு இன்னொரு மீனை பிடிக்க முயன்றார்.
அப்போது வாயில் கடித்து வைத்திருந்த மீன் திடீரென நழுவி தொண்டைக்குள் பாய்ந்தது. மீன் வயிற்றுக்குள் செல்லாமல் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதில் மூச்சு திணறி உயிருக்கு போராடினார். அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment