வாஷிங்டன்:பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹர்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி(ஹுஜி) போராளி இயக்கத்தின் கமாண்டர் முஹம்மது இல்யாஸ் கஷ்மீரியைக் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு அமெரிக்கா 50 லட்சம் டாலர் பரிசு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் உள்பட இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஹுஜி நடத்தியதாக கூறப்படும் பல்வேறு தாக்குதல்களில் இல்யாஸ் கஷ்மீரிக்கு பங்குண்டு என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டுகிறது.
இல்யாஸ் கஷ்மீரியைக் குறித்து தகவல் கிடைத்தால் அமெரிக்க தூதரகத்திலோ, துணை தூதரகத்திலோ அறிவிக்க வேண்டுமெனவும், தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment