காஸ்ஸா:மேற்கு கரை நகரமான நப்லூஸிற்கு அடுத்துள்ள கிராமத்தில் நடு இரவில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவம் இருநூறுக்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் பெண்களையும், குழந்தைகளையும் கைது செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை அவர்தா கிராமத்தில் இஸ்ரேல் ராணுவம் அட்டூழியத்தை மேற்கொண்டது. பெண்களையும், குழந்தைகளையும் சுற்று வளைத்து ராணுவத்தினர் அப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஃபலஸ்தீன் ஆணையம் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இரவு முழுவதும் இஸ்ரேல் ராணுவம் வீடுகள் தோறும் தேடுதல் வேட்டையை நடத்தியதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது. நான்கு வாரமாக பரிசோதனை நடத்திவரும் இஸ்ரேல் படை ஏராளமானோரை கைது செய்துள்ளது.
அவர்தா கிராமத்திற்கு அருகே வசித்திருந்த இஸ்ரேல் குடும்பத்தினரின் கொலைத் தொடர்பாக இத்தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை எவர் மீதும் குற்றஞ்சுமத்தவில்லை. அதேவேளையில், ஃபலஸ்தீனர்களை சிறையிலடைத்ததுக் குறித்து பதில் கூற இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது.
காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு ஃபலஸ்தீனி கொல்லப்பட்டார். பிஞ்சுக் குழந்தை உள்பட எட்டுபேருக்கு காயமேற்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment