கணிணியின் இயங்குதளம் மற்றும் வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும்.
பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணிணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும்.
கணிணியில் குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு டிவைஸ் டிரைவர்களை(Device drivers) அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்றால் மென்பொருள்களுக்கு அப்டேட் இருப்பது போல வன்பொருள்களையும் அப்டேட் செய்வது கணிணியின் திறனையும் கருவிகளின் உறுதிப்பாட்டையும் அதிகரிக்கின்றன.
சிலரின் கணிணியில் என்னென்ன நிறுவப்பட்டுள்ளது, எவை சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியாது. சில கணிணிகளின் குறிப்பிட்ட வன்பொருள்களுக்கு டிரைவரே இருக்காது. இதனால் டிரைவர் கோப்புகளைத் தேடி இணையதளங்களில் தேடி அலைய வேண்டியதில்லை.
இதற்கென இருக்கும் ஒரு இலவச மென்பொருள் Device Doctor. இந்த மென்பொருள் பெரும்பாலான கருவிகளையும் அவற்றின் நிறுவனங்களையும் ஆதரிக்கிறது. இதன் தரவுத்தளத்தில் 3000 GB க்கும் மேற்பட்ட டிரைவர்கள் உள்ளன. இதன் Cache சேகரிப்பு முறையால் வேகமாக டிரைவர்கள் மற்றும் அப்டேட்களை தரவிறக்க முடியும்.
கணிணியில் அப்டேட் செய்யப்பட வேண்டிய டிரைவர்களை விரைவாக சோதித்து பட்டியலிடுகிறது. பெயர் தெரியாத டிரைவர்களையும் பெயரைக் கண்டறிந்து காட்டுகிறது. இந்த மென்பொருள் விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக்கூடியது.
0 கருத்துரைகள்:
Post a Comment