Friday, March 11, 2011

பின் அலியின் கட்சி கலைப்பு

துனீஸ்,மார்ச்.10:வெளியேற்றப்பட்ட துனீசியாவின் ஏகாதிபத்தியவாதி ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் கட்சியான ராலி ஃபார் கான்ஸ்ட்யூசனல் டெமோக்ரஸியை (ஆர்.சி.டி) துனீசிய நீதிமன்றம் கலைத்துவிட்டது.

கட்சியின் சொத்துக்களும், நிதியும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வோம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனி தேர்தல்களில் பின் அலியின் கட்சி போட்டியிட முடியாது.

மக்கள் புரட்சியைத் தொடர்ந்து ஜைனுல் ஆபிதீன் பின் அலி நாட்டை விட்டு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி வெளியேறியபோதே அவருடைய கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யவேண்டுமென கோரிக்கை வலுத்திருந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கட்சியின் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளுக்கு துனீசிய உள்துறை அமைச்சகம் தடை விதித்திருந்தது. இதற்கிடையே மேலும் 10 கட்சிகளுக்கு செயல்பட அனுமதி வழங்கியுள்ளது துனீசியாவின் இடைக்கால அரசு. இத்துடன் அதிகாரப்பூர்வமாக துனீசியாவில் செயல்படும் கட்சிகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. எட்டு கட்சிகளுக்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza