பிரவின் முத்தலிக்கை கைது செய்து மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினர்(ஏ.டி.எஸ்) விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பிரவீன் முத்தலிக்கிடம் மேற்கொண்ட விசாரணையின் போது ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிக்க பயிற்சி அளித்த திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
பிரவீன் முத்தலிக் பல ஹிந்து சிறுவர்களுக்கு தீவிரவாத தாக்குதல்களை எவ்வாறு நிகழ்த்துவது என்பதுக் குறித்து தனது கண்காணிப்பின் கீழ் பயிற்சி அளித்துள்ளதாக ஏ.டி.எஸ் கூறுகிறது. இதனை அவரிடம் நடத்திய விசாரணையின்போது பெற்றதாக ஏ.டி.எஸ் தலைவர் ராகேஷ் மரியா தெரிவிக்கிறார்.
மேலும் மரியா தெரிவித்ததாவது:"பிரவீன் முத்தலிக்கிடம் நடத்திய விசாரணையில் பல முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவை பதிவுச் செய்யப்பட்டுள்ளன. பிரவீன் முத்தலிக் தெரிவிக்கையில், ஹிந்து சிறுவர்களுக்கு வெடிக்குண்டு தயாரிப்பது, ஆயுதங்களை கையாளுவது, தற்காப்புக்கலை ஆகியவற்றை கற்றுக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் பலரின் பெயரையும் குறிப்பிட்டார். அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை சாட்சிகளாக சேர்த்துள்ளோம். முத்தலிக் ஹிந்து சி்றுவர்களை வெடிக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு சாரணர்களாகவும் பயன்படுத்தியுள்ளார்." என ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment