ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் 40லட்சம் மக்கள் வீடிழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை.
ஜப்பானின் வடக்குகிழக்கு பகுதியில் 7.9 ரிச்டர் பரிமாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் மியாகி கரையோரப் பிரதேசத்தில் 20 அடி உயரமான அலைகள் எழக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவில் இருந்து 250 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இடத்தில் பூமியின் மேற்புறத்தில் இருந்து 20 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் 6.9 ரிச்டர் பரிமாண நில அதிர்வும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வீடுகளும், கட்டிடங்களும் மற்றும் வாகனங்களும் அடித்து செல்லப்பட்டுள்ளன. செண்டை நகரில் உள்ள ஒரு பெற்றோல் ஸ்ரேசன் தீப்பற்றியதால் பல இடங்களில் தீப்பரவலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆழிப்பேரலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதே வேளை ரஸ்யா மற்றும் தாய்வான் ஆகிய இடங்களுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
40 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
அவ்வாறு ஜப்பானில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள விரும்பும் நபர்கள் 0772267929/0115743362/011-4719593 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment